டமால் என்ற சத்தம் கேட்டதால் வானத்தை பார்த்த பொதுமக்கள்! இதுதான் விஷயமா?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலுள்ள கொத்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென்று மாலை பொழுதில் வானத்தில் சத்தம் கேட்டுள்ளது. இதைதொடர்ந்து அதிக சத்தத்துடன் வெடி விபத்து போன்ற சத்தம் ஏற்பட்டது.
இதனால் வீடுகளில் உள்ளே இருந்த அனைவரும் அதிர்ச்சியில் வெளிய வந்து பார்த்தனர். பார்த்த மக்கள் அனைவரும் வானம் பிளவுற்றதா? அல்லது வானத்தில் மின்னல் வெடிப்பு ஏற்பட்டதா? என பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.
ஆனால் வானத்தில் சத்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு சில நொடிகளில் அங்கு பல விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. விமானம்தான் நேருக்கு நேர் மோதியதாக சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். மொத்தமாக ஐந்து விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் போர் விமானங்கள் அனைத்தும் வானிலே வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. இந்த விமானங்கள் அனைத்தும் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. அதிக சத்தத்துடன் ஒலிய எழுப்பிச் சென்றது. ஒருமுறை அல்ல ஐந்து முறையும் இந்த ஒலிபியை எழுப்பி இருந்தது. இந்த விமானம் சோனிக் வேகத்துடன் பறந்தது. சோனிக் வேகம் காரணமாக சோனி பூம் என்ற விளைவு ஏற்பட்டு ஆற்று
வெடிப்பது போன்ற சத்தம் கேட்கும். நேற்றும் இந்த சத்தம் வானத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டே நின்றனர். கடைசியில் தான் இது அருகில் உள்ள தஞ்சாவூர் விமானப்படை தளத்திலிருந்து வந்த போர் பயிற்சி விமானங்கள் என்று தெரியவந்தது. இதை அறிந்த பொதுமக்கள் அனைவரும் வியப்பில் பார்த்து வந்தனர்.