மக்களிடம் இன்னமும் கோடி கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள்!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Vinoth

ரிசர்வ வங்கி தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 தேதி நள்ளிரவு முதல் 500ரூபாய், மற்றும்  1000ரூபாய் செல்லாது என்ன மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய நோட்கள் மாற்றுவதில் மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்தனர்.

அபோது தான் புதிய 20௦௦ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்துப்பட்டது. அதன் பின்பு ஓரளவுக்கு பணப்பிரச்சினை குறைந்தது. மேலும் இந்தக் புதிய நோட்டுகள் ரூ.3.56 லட்சம் கோடி புழக்கத்தில் விடப்பட்டது. இந்த புதிய 20௦௦ரூபாய் நோட்டுகள் கடந்த வருடம் மே மாதம் 19-ம் தேதி திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதனையடுத்து 2000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ. 7,961 கோடியாக குறைந்தது. வங்கி ஒழுங்கு முறை ஆணையத்தின் படி ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாத நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக அறிவித்தது. மேலும், ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னமும் பொதுமக்களிடம் மீதமுள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும் தற்போது 98% வங்கிகளுக்கு புதிய 2௦௦0ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்து விட்டது. மீதம்முள்ள ரூ.6,970 கோடி 2% மட்டும் மக்களிடம் 2000 ரூபாய் உள்ளது. அதனை வங்கி கணக்கில் மற்றும் தபால் மூலமாகவும் செலுத்தி அதுக்கு நிகரான தொகையை திரும்ப வாங்கி கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.