இறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் மக்கள் அவதி! மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமா??

Photo of author

By Kowsalya

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை என இறப்பு சான்றிதழ் தர முடியவில்லை என குற்றம் சாடியுள்ளது. அதனால் பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சாதாரனமாக சென்னையில் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் மாநகராட்சிக்கு அறிவித்து, மயான இடங்களில் தரும் சான்றிதழை சமர்பித்து இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் இறந்தோர் விபரங்களை அந்த மருத்துவமனை மாநகராட்சியின் இணையத்தில் பதிவு செய்யும். அதன்பின் மாநகராட்சி இறப்பு சான்றிதழை வழங்கும்.
அதன் பின் மாநகராட்சி சுகாதார அலுவலர் கையொப்பமிட்ட சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த ஒரு மாதமாக மருத்துவமனைகளில் இறப்பவர்களின் விவரங்களை மருத்துவமனைகள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதால் இறப்புச் சான்றிதழைப் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை கூறியதாவது, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை இன்னும் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது. பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்தான் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை உள்ள இறந்தவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து, 28ஆம் தேதி முதல் மே 8ஆம் தேதி வரை உள்ள விவரங்களை நேரடியாக சமர்ப்பித்துள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்தால் தான் எங்களால் சான்றிதழ் தர முடியும். அவர்களிடம் கேட்டு காரணம் கேட்டால் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே மருத்துவமனை வருகின்றனர் என்று அவர்கள் கூறுகின்றனர். இதை சுகாதாரக் துறை தான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.