கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

0
271

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சியில் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது ஏராளமான பொருட்கள் சிலரால் எடுத்து செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. மேலும் பள்ளியின் பல்வேறு பொருட்கள் சிலரால் எடுத்து செல்லப்பட்ட வீடியோக்களும் வெளியாகின.

இந்த கலவரத்தை முன்கூட்டியே கணித்து தடுக்காமல் விட்டது உளவுத்துறையின் தோல்வி என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்பகுதியில் தண்டோரா போடப்பட்டது. அதையடுத்து சாலை ஓரங்களில் பலரும் மேசை, நாற்காலி, சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை வீசி சென்றுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.

Previous articleஎஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!… எளிய முறையில் இவற்றை செய்யலாம்!…
Next article“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here