ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் செய்த மரியாதை! நெகிழ்ந்து போன ராணுவ வீரர்!

Photo of author

By Sakthi

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நீமுச் என்ற கிராமத்தில் வசித்து வந்த விஜய் சிங் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார்.அவ்வாறு திரும்பிய அவரை நாட்டிற்காக சேவை செய்து நிறைவாக ஊர் திரும்பிய அவருடைய வருகையை அந்த கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உள்ளங்கைகளை நீட்டி அவருடைய கால்களை தாங்கி வரவேற்று இருப்பது பார்ப்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் செயலாக இருந்தது. தம்முடைய உள்ளங்கைகளின் மீது அவருடைய பாதங்களை வைத்து செல்லுமாறு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்கு பின்னர், அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். இதனை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட அந்த ராணுவ வீரர் விஜய்சிங் 17 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றியதற்காக நான் பெருமைப் பட்டேன். அதற்கான முழுமையான பலனை இன்று நான் பெற்றிருக்கிறேன் மக்களுடைய இந்த வரவேற்பு எனக்கு நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது இதனை என்னுடைய சிரம் தாழ்த்தி தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.