புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்!

Photo of author

By Kowsalya

புளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்!

பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் குழந்தையை துணிப்பையில் போட்டு புளிய மரத்தில் கட்டிவிட்டு போன சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளங்குடி பட்டி என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ள அய்யனார் கோவிலின் முன்பு ஒரு பெரிய புளியமரம் உள்ளது.

அந்தப்பக்கம் செல்பவர்களுக்கு அந்த புளிய மரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.

புளிய மரத்தின் பக்கம் சென்று பார்த்தவர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு ஒரு துணிப்பையில் மூன்று வயதே ஆன பெண் குழந்தையை பைக்குள்‌ போட்டு மரத்தில் தொங்கவிடபட்டுள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குழந்தையை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக குழந்தையை புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை மற்றும் குழந்தையின் உடல்நலம் குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் தற்போது கவனித்து வருகின்றனர்.

இந்த மிகப்பெரும் கொடுஞ்செயலை செய்த நபர்கள் யார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையே இல்லாமல் பலர் தவித்து வரும் நிலையில் பெண் குழந்தை என்பதால் மரத்தில் பைக்குள் போட்டு தொங்கவிட்டு விட்டுப் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.