கமலஹாசனுக்கு வில்லனாக மாறும் மக்கள் செல்வன்! புதிய அப்டேட்!

0
148

மாஸ்டர்  படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமலஹாசனை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இதன் போஸ்டரில் ‘Once upon a Time there lived a ghost’ கமல்ஹாசன் 232 என்ற ஒர்கிங் டைட்டிலை வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கப்போகிறார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்  வெளிவரவில்லை எனினும் இந்த தகவல் தீயாய் பரவுகிறது.

கமலஹாசனின் 60 வருட நிறைவு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கமல்ஹாசனிடம் கேட்பார்.அதனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என வட்டாரம் கூறுகிறது.

மேலும் கமலஹாசனின் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருவதாகக் தகவல் கிடைத்துள்ளது.

Previous articleதமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை:! வானிலை மையம் அறிவிப்பு!!
Next articleபெண்கள் கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சோபியா டங்க்லி தேர்வு