மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி!

Photo of author

By Hasini

மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி!

தற்போது அனைத்து மாநிலங்களின் டிஜிபிகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்கள் கலந்துகொள்ளும் 56 வது மாநாடு தற்போது லக்னோவில் அமைந்துள்ள உத்திரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இணையவழி குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில் விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது என்று கூறியுள்ளார். மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில், நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக் கூடாது என்றும், லகிம்பூர் கெரி வழக்கில் உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவருடன் மேடையை பகிரக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மந்திரியின் மகன் என்பதால் அரசியல் அழுத்தம் காரணமாக உத்தரபிரதேச அரசு நீதியை நசுக்க முயன்றது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பம் நீதியை விரும்புகிறது. மக்களும் இதையே எதிர்பார்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அந்த குடும்பத்திற்கு நீதி எப்பிடி வழங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நான் பிரதமர் மோடிக்கு கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.