அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தற்காலிகமாக பதவியேற்ற கமலா ஹாரிஸ்!

0
74

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை விழுத்தி அமெரிக்க நாட்டின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவர் பராக் ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில் துணை அதிபராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தான் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தனி அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதை நிரூபித்துக் காட்டும் விதத்தில், இந்திய வம்சாவழியைச் சார்ந்த தமிழகத்தில் பிறந்த திருமதி கமலா ஹாரிஸ் அவர்களை அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருந்தார். அமெரிக்கா வாழ் தமிழர்களின் மகிழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக, அமைந்தது.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில்இருக்கக்கூடிய மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கே அவருக்கு பெருங்குடல் குறித்து மயக்கவியல் முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சையில் இருந்து குணமாகும் வரையில் தன்னுடைய அதிபருக்கு உண்டான அதிகாரத்தை அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இதனைத் தொடர்ந்து அதிபர் சோபா எனக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவ சோதனை நடந்ததன் காரணமாக, கமலஹாசனுக்கு தற்காலிக அதிகாரம் வழங்கப்பட்டது 1.25 மணி நேரம் அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் இருக்கையில் கமலா ஹாரிஸ் அமரவில்லை என்றும், தற்காலிக அதிபராக பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் ஜோ பைடன் மறுபடியும் அமெரிக்க அதிபர் பணியை தொடங்கினார். அமெரிக்காவில் பெண் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர்  கமலா ஹாரிஸ் பெற்றிருக்கிறார்.