வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

0
196
People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!
People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் மாநாடு சொல்லும் முக்கிய செய்தி என  தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இளைய சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை. என்பது விஜய் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்களின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. வாரிசு அரசியலை விரும்பாத இளைஞர்கள் தன்னெழுச்சியாக விஜய் மாநாட்டில் பங்கேற்று உளளனர். விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஓப்பனாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும் அவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஐ சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசியதை வரவேற்பதாக கூறினார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை முதன் முதலில் செயல்படுத்தியவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர்.

விடியா அரசை தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தமிழக வெற்றிக்கழக மாநாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த மாநாட்டினால் அதிமுகவுக்கு எள் அளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சிக்கு தான் தமிழக வெற்றிக்கழகம் மிகப் பெரும் பாதிப்பாக இருக்கப் போகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாரிசு ஆட்சி முறையினால் இளைய சமுதாயத்தின,ர் மக்கள் கொதித்து போய் விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர். மன்னர் ஆட்சி முறை போல திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு மணிமகுடம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவர் கூறுகையில் தொடங்கி 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகளில் ஆட்சி பீடத்தில் இருந்த அதிமுக, தமிழக மக்களின் நிரந்தரமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. எனவே திமுகவிற்கு தான் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் அதன் கொள்கைகள் பாதிப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Previous articleஇவர் தான் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்!! பாலிவுட் சூப்பர் ஸ்டாரோ கோலிவுட் சூப்பர் ஸ்டாரோ கிடையாது!!
Next articleஎழுதிக் கொடுத்தவனும் ஒப்பித்தவனும் சூப்பர்!! அட்டகாசமான நடிப்பு வெளுத்து வாங்கிய மெட்டிஒலி நடிகர்!!