Salt: உப்பை அதிகளவில் உபயோகிப்பதால் இரப்பை புற்றுநோய் உண்டாகும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உப்பை அதிக அளவு எடுத்துக் கொண்டால் உடலில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தற்போதைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். நாம் உணவில் உப்பு அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் என தொடங்கி புற்றுநோய் வரை உண்டாகக்கூடும். இதன் உண்மை தன்மை குறித்து தற்பொழுது புற்றுநோய் குறித்த ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்துள்ளனர். அவர் ஆய்வு செய்ததில் அதிகப்படியானவருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நம் இந்தியர்களிடம் இந்த இரைப்பைப் புற்றுநோய் அதிக அளவில் உண்டாக வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது. இதன் கீழ் குறைந்தபட்ச பத்து ஆண்டுகளில் 440 பேருக்கு இறப்பை புற்றுநோய் ஆனது உறுதியாக உள்ளது.
கணிசமான அளவில் நம் தினசரி உண்ணும் உணவில் உப்பு சேர்க்கும் பொழுது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் அதிகரிக்கும் பட்சத்தில் ரத்த அழுத்தம் இதய நோய் பக்கவாதம் சிறுநீரகக் கோளாறு போன்றவை உண்டாகும். மேற்கொண்டு நமது உணர்வில் அதிக அளவு சோடியம் அல்லாத உப்பு பயன்படுத்த வேண்டும். முன்னதாகவே உடலில் இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் காலப்போக்கில் உப்பு எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்வது அவசியம்.