குளிர்காலத்தில் தோல் நோய் பிரச்சனையை சந்திப்பவர்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

Photo of author

By Divya

வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலத்தில் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது.இந்த குளிர்காலத்தில் குளிர் தொல்நோய் என்ற பாதிப்பை சிலர் சந்திக்கின்றனர்.இந்த நோய் மிகவும் அரிதான பாதிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.நமது சருமத்தை இந்த நோய் பாதிப்பு நேரடியாக பாதிக்கிறது.

அதிகம் குளிர்ந்த நீரில் கால்களை வைத்தலோ அல்லது அதிக குளிரான இடங்களில் இருந்தாலோ இந்த தோல் நோய் ஏற்படும்.நடுத்தர வர்க்கத்தினர் இந்த நோய் பாதிப்பை அதிகளவு சந்திக்கின்றனர்.

தோல் நோயால் ஏற்படும் பாதிப்பு:

1)இரத்தம் உறைதல்
2)மரணம்

தோல் நோய் அறிகுறிகள்:

*தலைசுற்றல்
*அடிவயிற்று வலி
*மூச்சு விடுவதில் சிரமம்
*தொண்டை வறட்சி
*தலைவலி
*மயக்கம்
*குறை இரத்த அழுத்தம்
*தோல் அரிப்பு
*சரும வீக்கம்

தோல் நோய் குணமாக இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள்:

1)முதலில் அதிக குளிர்ந்த தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.உடலை குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

2)குளிர்ந்த நீரில் நீச்சல் அடிப்பதை தவிர்க்க வேண்டும்.இயற்கையான முறையில் தோலை மிருதுவாக பராமரிக்க வேண்டும்.

3)கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் தோல் மிருதுவாக இருக்கும்.

4)தேங்காய் எண்ணெயில் நெய் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் தோல் பாதிப்பு குணமாகும்.

5)அதிக வறட்சி உண்டாக்கும் சோப்பை சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

6)தேங்காய் எண்ணெயில் கற்றாழை ஜெல் சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்து தோலில் அப்ளை செய்து வந்தால் சருமம் மிருதுவாக இருக்கும்.

7)பெட்ரோலியம் ஜெல்லை சருமத்திற்கு அப்ளை செய்து வந்தால் தோல் நோய் வருவது கட்டுப்படும்.

8)தோலை மிருதுவாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.குளிர்காலத்தில் உடல் வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.