சபரிமலையில் தரிசன முன்பதிவு செய்யாதவர்களும் அனுமதிக்கப்படுவர்“

Photo of author

By Rupa

திருவனந்தபுரம் : “மகரவிளக்கு  மற்றும் மண்டலம் பூஜை களத்தின் போது, உடனடி தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட்டது .அதே சமயம் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் ,என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள ஐய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதையடுத்து, இந்த வருடம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவர் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது பா.ஜ.க மற்றும்  காங்கிரஸ் உள்ளிட்ட  ஏதிர்க்கட்சிகளும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதன்படி, கேரள அரசின்  தேவஸ்வம் அமைச்சர் V.N. வாசவன் நேற்று கூறியுள்ளதாவது: கூட்ட நெரிசலை சமாளிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் வாயிலாக தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த வருடம்  மண்டல பூஜை காலத்தின்போது, நாளொன்றுக்கு, 80,000 பேரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வந்து, தரிசனம் செய்வதற்கு உடனடி டிக்கெட் பெறும் திட்டம் இல்லை எனவும், அதே சமயம், குறிப்பிட்ட நேரத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்களை பதிவு செய்யலாம்.

விரதம் இருந்து சபரிமலைக்கு வருவோர், ஐய்யப்பனை சாமி தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டார்கள். அனைவருக்கும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார்.