அரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!!

Photo of author

By CineDesk

அரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!!

CineDesk

அரசு பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும்

அரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!!

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டர் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண்டும். 3 ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து,  5 ஆயிரம் ஊழியர்களை  கொண்டிருக்க வேண்டும் என அரசு நிபந்தனைகள் விதித்திருந்தது.

இந்த விதிமுறைகளை எதிர்த்து குவாலிட்டி பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை  எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, நிறுவனம் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் செயல்படவேண்டும், மூன்று ஆண்டுகளில் 30 கோடி ருபாய் வர்த்தகம் செய்து, 3 ஆயிரம் பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும் என அரசு தரப்பில் நிபந்தனைகள் மாற்றியமைக்கப் பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  டெண்டர் நிபந்தனைகளின் வெளிப்படைத்தன்மை சட்டப்படி வெளியிட்டுள்ளது இதை மாற்ற முடியாது என தெரிவித்த அரசு, தற்போது நிபந்தனைகளை திருத்தியதற்கான  காரணங்களை  தெரிவிக்கவில்லை. எனவே டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்து, புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மேலும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு ஏதுவாக, தூய்மை பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு தமிழ் மொழி தெரிந்தவரையே நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காததை சுட்டிக்காட்டி, டெண்டரை பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.