வீட்டில் சிலை அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் இதை செத்தே ஆக வேண்டும்!!

Photo of author

By Rupa

பொதுவாக நமது பூஜை அறையில் படங்கள் வைத்து வழிபடுவது என்பது முறை. அதைத் தாண்டி விக்கிரகம் வைத்து வழிபடுவதும் ஒரு விதமான முறை. பூஜை அறையில் சாமியின் படங்களை வைத்து வழிபடும் பொழுது சாமியின் படம் பெரியதாகவும் இருக்கலாம் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால் விக்கிரகம் வைத்து வழிபடும் பொழுது அதற்கு என்று சில நியதிகள் உள்ளது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை பற்றி காண்போம்.

ஒவ்வொரு விக்கிரகமும் இறைத்தன்மையை ஈர்க்கின்ற ஆற்றல் என்பது, அந்த விக்கிரகத்தின் அளவையும், உயரத்தையும் மற்றும் பொருளையும் பொருத்து மாறும். இதில் பொருள் என்பது அந்த விக்கிரகம் எதனால் ஆனது என்பதை குறிக்கும். அதாவது அந்த விக்கிரகம் கருங்கல்லால் ஆனதா, பஞ்சலோகத்தால் ஆனதா, தங்கத்தால் ஆனதா, பல உலோகங்களால் ஆனதா, வெள்ளியால் ஆனதா, செம்பால் ஆனதா என பலவிதமான முறைகளில் விக்கிரகங்கள் உள்ளன.

இது மட்டுமின்றி இயற்கையாக கிடைக்கக்கூடிய கற்கள் படிகம், மரகதம் என பலவிதமான பொருட்கள் உள்ளன. இதனால் அதன் ஈர்ப்பு தன்மையும் வேறுபடும். அதேபோன்று அந்த விக்கிரகத்தின் உயரம் ஆறு அங்குலம் தான் இருக்க வேண்டும். அவ்வாறு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடும் பொழுது அதனை சரியான முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும். தினமும் அந்த கடவுளை வழிபடுவதற்கு என நேரத்தை ஒதுக்கி அர்ச்சனை, அபிஷேகம் போன்றவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்.

விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் தினந்தோறும் பழைய பூக்களை எடுத்துவிட்டு புதிய பூக்களை வைத்து பாலாபிஷேகம் போன்ற அபிஷேகங்களை செய்து ஆராதனை காட்டி தினமும் வழிபாடு செய்ய வேண்டும். தினமும் இந்த வேலைகளை கண்டிப்பாக என்னால் இறைவனுக்கு செய்ய முடியும் என எண்ணுபவர்கள் மட்டுமே விக்கிரகங்களை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

ஏனென்றால் எனக்கு நேரமில்லை என்று ஒதுக்கக் கூடிய காரியம் அல்ல இது.
நாம் வைத்திருக்கக் கூடிய சிலையானது அரை அடியாக இருந்தால் அதனை எளிதாக நாம் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்யலாம். ஆனால் விக்கிரகமானது பெரியதாக உள்ளது என்கின்ற பொழுது அவர்கள் வைத்திருக்கக் கூடிய விக்கிரகம் பிள்ளையாராக இருந்தால் மாதத்தில் சதுர்த்தி எப்பொழுது வருகிறதோ அந்த நாளிலும், முருகன் வைத்திருந்தால் விசாகம், சஷ்டி, செவ்வாய், வெள்ளி போன்ற ஏதேனும் ஒரு நாட்களில் கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவலிங்கத்தை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பிரதோஷம் அன்று அபிஷேகம் செய்தாக வேண்டும். பெருமானை வைத்திருப்பவர்கள் சனிக்கிழமை, திருவோணம், ஏகாதசி போன்ற நாட்களில் கண்டிப்பாக அபிஷேகம் செய்தாக வேண்டும். அம்மன் சாமிக்கு வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் செய்தாக வேண்டும். விக்கிரகங்கள் வைத்திருப்பவர்கள் இதனை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் சாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அந்த விக்கிரகத்தின் முழு அருளை நம்மால் பெற முடியும்.