நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி
இந்தியா என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய கூட்டணியின் ஆணவத்தை மக்கள் தோற்கடிப்பர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி அவர்களைக் குறித்து விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசியதாவது, “அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல. அவர் எப்படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்” என கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மத்திய அமைச்சர்,அனுராக் தாக்கூர் அவர்கள், 2014க்கு முன்பும் காங்கிரஸ் கட்சியினர் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாஜக ஆட்சி அமைக்க முடியாது என கூறி வந்தனர் என்று குறிப்பிட்டார்.
ஆனால் பாஜக ஆகிய நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தோம் என்றும்,
அதேபோல் 2019க்கு முன்பு அதையே சொன்னார்கள் ஆனால் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
கடவுளின் பாக்கியம் போல் நாம் கருதும் இந்த ஜனநாயகத்தின் பொது மக்களே ஏழைக் குடும்பத்தின் மகனை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்தியா என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய கூட்டணியின் ஆணவத்தை மக்கள் தோற்கடிப்பர்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது போல மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது அனுராக் தாக்கூர், பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.