ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?

0
47

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?

வல்லாரைக் கீரை என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாக இருக்கும். இந்த வல்லாரைக் கிரையில் பலவித சத்துக்கள் உள்ளது.

உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்களை குறைக்கக் கூடிய சக்தி கொண்ட இந்த வல்லாரைக் கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

வல்லாரை கிரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்…

* வல்லாரைக் கீரையை நாம் சாப்பிடுவதால் உடலில் உள்ள ஹீமேகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை நோயை குணப்படுத்துகின்றது.

* சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற தோல்வியாதி இருப்பவர்கள் இந்த வல்லாரைக் கீரையை சாப்பிடலாம். இதனால் தோல்நோய்கள் குணமாகின்றது. தோல் நோய்கள் உள்ளவர்கள் வாரம் இரண்டுமுறை வல்லாரை கீரையை சாப்பிட்டு வர வேண்டும்

* காய்ச்சல், உடல் சோர்வு உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகி உடல் சோர்வு நீங்கும்.

* வல்லாரை கீரையை மிளகுடன் சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

* வாய்ப் புண்ணால் அவதிப்படுபவர்கள் அனைவரும் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் நான்கு அல்லகு ஐந்து வல்லாரை கீரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

* தினமும் வல்லாரை கீரையின் இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூளையின் நரம்புகள் பலம் பெறும்.

* வல்லாரை கீரையை பச்சையாக சப்பிட்டு விழுங்கினால் குடல் புண் குணமாகும். மேலும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.

* வல்லாரை கீரையை கொண்டு தினமும் பல் துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும்.

* வல்லாரை கீரை நாம் தினமும் சாப்பிடும் பொழுது நமக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* வல்லாரை கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, தாது உப்புகள், சுண்ணாம்புச் சத்து ஆகியவை அதிகளவில் உள்ளது.