தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் கனமழை பெய்து வருவதால் அங்கு ஊரே வெள்ளக்காடாக மாறிய சம்பவம் ஏற்கனவே மக்களை பாதித்துள்ள நிலையில், இன்று மாநகராட்சி செய்துள்ள முகம் சுழிக்கும் சம்பவம் மேலும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக மக்கள் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். அவ்வளவு பெரிய வீடு கட்டியும், வீடு இருந்தும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியுற்று முகாம்களில் தங்கி இருக்கின்றனர். அப்படி முகாமில் தங்கி இருக்கும் மக்களுக்கு மாநகராட்சி செய்த இந்த சம்பவம் என்னவென்று பாருங்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாமில் தங்க வைத்திருக்கும் பொழுது அவர்களுக்கு உணவு வழங்க குப்பை வண்டியை பயன்படுத்திய மாநகராட்சி.
குப்பை அள்ளும் வண்டியில் உணவுகளை எடுத்து வந்து முகாம்களில் அளித்துள்ளனர் மாநகராட்சியினர். இதனை பார்த்தாலே முகம் சுழிக்கும் வண்ணம் உள்ளது.மேலும் இதனாலும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என மக்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே வாழ்விற்கு போராடும் அவர்களுக்கு இதுவும் பெரிய ஒரு போராட்டமாக அமைந்துள்ளது.
இந்த மாநகராட்சியின் அலட்சியப் போக்கு பேசும் பொருளாக மாறி உள்ளது.
மேலும் இன்றும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள பல ஏரிகள் உடைந்து சாலையை அடித்துப் போகும் அளவிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.