சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

0
107
People's movement preparing for assembly elections!! Happy fans!!
People's movement preparing for assembly elections!! Happy fans!!

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மே மாதம் நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது.

இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய் மாணவர்களிடம் ஓட்டு போடுவதற்கு பணம் வாங்க கூடாது என்றும், இதனை பெற்றோர்களிடமும்  சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அரசியலுக்கு  வருவதையும் மறைமுகமாகவும்  கூறினார். அதனையடுத்து ரசிகர்கள் சில தளபதி அரசியலுக்கு வருவர் என்று இணையத்தில் தகவல்களை பரவி வந்தார்கள். இதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்தார்கள்.

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு உடன் இணைத்து நடித்து முடித்து விட்டு அடுத்த 3 ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஓய்வேடுக்கவுள்ளதாக தகவல் வந்தது. மேலும் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்துவர் என்று தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் இன்று அவர் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் பனையூர் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தொகுதிவாரியாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது.

Previous articleஇனி சாலையோர வாசிகளுக்கு பிரபல நடிகர் வீட்டில் விருந்து!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
Next article11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்” இதனை உடனடியாக நிறுத்துங்கள் – உதயநிதி!!