அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு – மா சுப்ரமணியம்!!
உதகை அருகே இத்தலார் பகுதியில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா. உதகையில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆய்வு என பல்வேறு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இத்தலார் பகுதியில் ஆய்வுவிற்க்கு சென்ற போது மருத்துவம் சார்ந்த பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த மக்களிடம் மருத்துவம் பெறுவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா என கேட்டு அறிந்தார். அப்போது தோடர் இன மக்களிடம் உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது என கேட்டாரிந்தார்.
அப்போது தோடரின பழங்குடியின பெண்கள் அரசு மருத்துவமனைகளில் தோடர் இன மக்களுக்கு என தனி வார்டு ஒதுக்க வேண்டும். அதற்கு அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைக் கேட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நிச்சயமாக புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் இன மக்களுக்கு பத்து படுக்கைகள் கொண்ட வசதியுடன் தனி வார்டு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.