பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

Photo of author

By Sakthi

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முடிவை எடுப்பதற்காக தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு,

இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி அன்று பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே இருக்கின்றது என மத்திய அரசு வாதம் செய்தபோது இதற்கு பேரறிவாளன் தரப்பு கடும் அதிருப்தியை தெரிவித்து இருந்தது.

மீண்டும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற பொழுது மத்திய அரசு தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டது. தமிழக ஆளுநர் ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவை எடுப்பார் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த சமயத்தில் பேரறிவாளன் சார்பாக மறுபடியும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள். அந்த உத்தரவில் பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆளுநருக்கு அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அதோடு இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் தமிழக ஆளுநர் இந்த பரிந்துரை மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கிறார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய வலைதள பக்கத்தில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு போதுமான அளவிற்கு நல்ல நேரம் பார்த்து விட்டீர்கள். இனிமேலும் கூட வேறு வேறு காரணங்களை கூறி காத்திருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை உடனே அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று தெரிவித்து இருக்கிறார்..