நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

Photo of author

By Kowsalya

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

Kowsalya

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார்.

 

இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம்.

 

பெரியார் தனது வாழ்நாளில் மூன்று படங்களுக்கு மேல் பார்த்ததில்லை. அப்படி அவர் பார்த்த நாடகத்தில் ஒன்றுதான் வைகோ சொன்ன சம்பூர்ண ராமாயணம். அதில் சிவாஜி பரதன் வேடத்தில் நடித்திருந்தாராம். அப்படி அவரது நடிப்பில் வியந்த பெரியார் “நான் பரதனை கண்டேன்” என்று எழுதினாராம்.

 

வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களில் வருவதற்கு முன்னே நாடகத்தை நடத்தி இருக்கிறார் சிவாஜி கணேசன். அப்படி பெரியாரை அழைத்து தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்க்க வேண்டும் என சிவாஜி கேட்க பெரியார் வருகிறார்.

 

அப்படி நாடகம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது பெரியாருக்கு தலைசுற்றல் வந்து விடுகிறது. அப்படி தலைசுற்றல் வருவதை மேடையில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் உணர்ந்து கீழே வந்து நீங்கள் வீட்டிற்கு புறப்படுங்கள் என்று சொல்கிறார்.

 

ஆனால் முழு நாடகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெரியாருக்கு வந்திருக்கிறது அதனால் ஒரு காபி மட்டும் கேட்டிருக்கிறார்.

 

ஒரு காபியை மட்டும் குடித்துவிட்டு முழு நாடகத்தையும் பார்த்துவிட்டு பிறகு மேடையில் பேசினாராம். சூழ்ந்து இருந்த மக்களை பார்த்து ராஜாஜி பேசுகிறார், இது வெறும் நாடகமல்ல. ஒரு தேசப்பற்றை உங்களுக்கு அழுத்தமான ஒரு கருத்தாக மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதுதான் இந்த நாடகத்தின் உறுதி”.  அதனால் மக்களே புரிந்து கொள்ளுங்கள் என்று ராஜாஜி மேடையில் பேசினாராம்.

 

நாடகத்தை வெறுத்த மற்றும் சினிமாவை வெறுத்த ராஜாஜி சிவாஜி கணேசனை பாராட்டுகிறார். சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படத்தை பார்க்கும் பொழுது நம் தேசப்பற்று உருவாகிறது என்று சொல்லலாம். அவரைப் போல யார் திருப்பூர் குமரனிலிருந்து, பகத்சிங்கில் இருந்து அவரால் மட்டுமே அனைத்து வேடங்களையும் நடிக்க முடியும்.