தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை!

Photo of author

By Parthipan K

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை!

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மருத்துவர் இராமதாஸ் அவர்கள் மரியாதை செலுத்தினார்

தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படும் பகலவன் தந்தைப் பெரியாரின் 46-ஆவது நினைவு நாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அவருடன் வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழி உட்பட பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்