தமிழ்மொழி ஒரு சனியன் என்று கூறிய பெரியார்!! களப்பணியில் சீமான் ஆவேசம்!!

Photo of author

By Gayathri

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ஈரோடு கிழக்கு மன்ற தொகுதி தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் நாங்கள் மக்கள் பணியை சிறக்க செய்தோம். எங்களோடு நின்று எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நான் திராவிடத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். என் முன்னோர்களை காட்டிலும் அரசியலில் என் நடைமுறை சற்று கூடுதலாக இருக்கும். என்னால் முடியவில்லை என்றாலும் என் தலைமுறையின் அடுத்த தலைமுறை நிச்சயமாக வெல்லும் என்று பதிவிட்டுள்ளார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஈவெரா குறித்து நீங்கள் ஓவராக பேசியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்று கேட்க, அவர் சாதாரணமாக நான் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளேன். அதற்குள்ளையுமா? என்று தொடர்ந்து பெரியார் குறித்த அவர் கருத்துக்களை அடுக்கி உள்ளார்.

பெரியாரை நான் படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளவில்லை. நான் படித்து வந்து பேசுகிறேன். முதலில் என் தலைமுறைகளிலும் பெரியாரை ஆதரித்தோர் உள்ளனர். ஆனால், கடைசியில் திருப்புமுனை எல்லார் வாழ்க்கையிலும் வந்து தெளிவு தரும். அதுபோல் எங்கள் வாழ்க்கையில் தற்சமயம் நாங்கள் பெற்றுள்ளோம். நான் பெரியாரை எதிர்ப்பேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அதில் உடன்பாடு இல்லை என்றால் தாராளமாக கட்சியை விட்டு விலகட்டும். கவலை இல்லை. உண்மை என்னவென்று தெரிந்து நான் குரல் கொடுக்கிறேன். திராவிடம் கொண்டாடப்படுகின்ற கொள்கை இல்லை! துண்டாகப்படுகின்ற கோட்பாடு.. மேலும், கொள்ளையர்களின் கூட்டம் திராவிடம். சில முன்னோர்களரது பெரியாருக்கு எதிரான கடைசி கால உரையை எடுத்துரைத்துள்ளார். உங்கள் தாய்மொழி முட்டாள்களின் மொழி! காட்டுமிராண்டி மொழி! அச்சனியனே ஒளி! என்ற பெரியாரின் கருத்தை நான் எதிர்த்து பேச தான் செய்வேன். மொழி என்பது அறிவுக்குறியது இல்லை என்றால், அடிப்படையானது என்றால் ஆங்கிலத்தை படிக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளார் சீமான். அவர் தனித்து போரிடும் எம் கட்சி 2026 தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியப்படுத்தியுள்ளார். அதற்கான களப்பணிகளும் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.