சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை திடீரென்று பணியில் நீக்கம் செய்ய முயற்சி செய்யும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிகக் குறைந்த ஊதியம் வழங்கி அவர்களுடைய உழைப்பினை குறிஞ்சி விட்டு தற்போது பணிகளில் இருந்து நீக்க முயற்சி செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 205 தற்காலிக ஊழியர்கள் இரண்டு வருடங்களில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் 1500 ரூபாய் என்ற மிகக் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.
ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நிதி சிக்கல் மற்றும் நிர்வாக முறைகளை காரணம் காட்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த தொடங்கியதால் பணி நிரந்தர உறுதிமொழியானது காற்றில் பறந்து விட்டது.
இதனால் 12 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரையில் அவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை என்பதை மிகுந்த வேதனைக்குரியது கடந்த மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு கூடிய பணியாளர்கள் காலியிடங்களை பொறுத்து படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உறுதியளித்திருந்தார்.
இப்படியான சூழ்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் தொகுப்பு புதிய பணியாளர்கள் அக்டோபர் மாதத்துடன் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருப்பது தொகுப்பூதிய பணியாளர்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறதா என்ற பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது அதோடு மட்டுமல்லாமல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு புதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக இன்று வரையில் அதனை நிறைவேற்றவில்லை என்பது வழக்கம் போல இதுவும் வெற்று ஏமாற்று வாக்குறுதிதானோ என்று நினைக்கவும் தோன்றுகிறது.
ஆகவே தமிழக அரசை இனிமேலும் தானே தாமதிக்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு கூடிய பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் அதோடு ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை ஈட்டிய இடுப்புத்தொகை ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை மற்றும் கடந்த 10 வருடங்களாக அனைத்து வகை ஊழியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி உயர்வு உள்ளிட்டவற்றையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்திருக்கிறார்.