புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி

Photo of author

By Parthipan K

அவசர கால சிகிச்சைக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அரசு அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டு, சீனா நோயிலிருந்து மீண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். உலகையே ஆட்டுவிக்கும் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டங்களில் உள்ள நிலையில், சீனா அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசி பரிசோதனையை கடந்த 22ஆம் தேதி தொடங்கியது.

சீனாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி உள்ளூர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது .இதில் தடுப்பூசி செலுத்தியவருக்கு லேசான பக்கவிளைவுகள் காணப்பட்டதாகவும் , இருந்தபோதிலும் காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் ஏதும் தென்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவசர கால சிகிச்சைக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம் என சீனாஅனுமதி அளித்துள்ளது.