19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 19% ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பெய்த கனமழையால் பல பகுதிகளில் விற்பனைக்கு தயாராக இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

எனவே நெல் கொள்முதல் கான ஈரப்பதத்தில் தளர்வு வழங்கி 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்படவே டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு செய்தது.

தற்போது கொள்முதல் செய்யப்படுவதற்கான நெல்லின் ஈரப்பத அளவை 17% லிருந்து 19% மாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தாமதமான அறிவிப்பு என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெல் சாகுபடிகள் முடிந்த நிலையில் தற்போது அறிவித்துள்ளது தாமதமாக உள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் மற்ற பயிர்களை விட குருவையின் ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.