இந்த படம் வேலைக்காகாது.. இந்தியன் 3 ரிலீஸா-வதில் ஏற்படும் சிக்கல்!!

Photo of author

By Gayathri

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகி மிக மோசமான விமர்சனம் பெற்ற படம் தான் இந்தியன் 2. இந்தப் படத்தால் சங்கரின் பெயர் மிகவும் மோசமானது என்றும் கூறலாம்.

சங்கர் இயக்கத்தில் வெளிவரும் படம் என்றாலே பிரம்மாண்டங்களுக்கு குறைவிருக்காது என்று ரசிகர்களிடையே கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் அதனை தலைகீழாக மாற்றிவிட்டது என்றும் கூறலாம்.

இந்தியன் 2 திரைக்கு வரும் பொழுது இந்தியன் 3 திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டன என்று கூறப்பட்டிருந்தது. சின்ன சின்ன வேலைகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடையே சென்றடையவில்லை.

இதனால் லைக்கா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படத்தினை ஒடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான வேலைகள் இன்னும் கொஞ்சம் இருக்கின்றது என்று சங்கர் தெரிவித்திருக்கிறார். மேலும் கமலஹாசன் இன்னும் படத்திற்கு டப்பிங் பேசி முடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் யின் இந்த முடிவிற்கு கமலஹாசனும் இயக்குனர் சங்கரும் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் தானாகவே ஒரு முடிவை எடுத்துள்ளது.

என்ன நடந்தாலும் இந்த திரைப்படத்தினை ஓடிடியில் தான் வெளியிடுவேன் என்று லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் விடாப்படியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.