விடாமுயற்சி, குட் பேட் அக்லி போட்டியில் வென்றது எது!!

Photo of author

By Gayathri

விடாமுயற்சி, குட் பேட் அக்லி போட்டியில் வென்றது எது!!

Gayathri

Persistence, what won the Good Bad Ugly Contest!!

நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில், அஜித் ரசிகர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகி இருந்தனர். சமீபத்தில் விடாமுயற்சி படம் இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறியவுடன் அஜித் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், படக்குழு புத்தாண்டன்று தவிர்க்க முடியாத காரணங்களால் படம் பொங்கலுக்கு வெளிவராது என அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இச்செய்தி அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், அவரது நடிப்பில் வெளியாக இருந்த விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகாததை தொடர்ந்து குட் பேட் அக்லி படக்குழுவினர் விடாமுயற்சியின் அப்டேட்ஸ்காக காத்திருந்தனர். விடாமுயற்சி படக்குழுவினரிடம் இருந்து தற்போது வரை தகவல் வராத நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாவது லுக் உடன் இந்தத் திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என தகவல்களை அறிவித்திரிக்கிறது. இதனால் மீண்டும் அஜித் ரசிகர்கள் இந்த படமும் ரிலீஸில் எந்த ஒரு தடங்கலும் வந்து விடக்கூடாது என்ற பயத்தையும் தாண்டி மிகுந்த சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர்.