சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள
எருக்கஞ்சேரியில் இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்தது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதனால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கத்தை மீண்டும் துவங்கியுள்ளனர்.மொட்டை மாடியில் நின்று கொண்டு மாஞ்சா நூலில் காத்தாடி விடுவதால் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்று தெரிந்தும் அதைத்தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் சென்னையில் மாஞ்சா நூலில் காத்தாடி விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரித்தும் இதுபோன்ற வேலைகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் சர்மா நகரில் உள்ள வீட்டிற்கு பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது அறிந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது.இதனை அடுத்து அங்குள்ளவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.