உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணிவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் மட்டுமல்லாது செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்.
அதில், அவர் சென்னை, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் குறங்கம்மை நோயாளிகளுக்கான 10 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 27 வயதுள்ள இளைஞர் நேற்றைய முன் தினம் சார்ஜா நாட்டிலிருந்து கோவை விமான நிலையம் மூலமாக தமிழகம் வந்துள்ளார். இவருக்கு உடம்பில் சிவப்பு நிற கொப்புளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயமடைந்த அந்த நபர் தப்பி சென்று விட்டார். அவரைத் தேடி கண்டுபிடித்து மீண்டும் பரிசோதித்த பொழுது அது குரங்கு அம்மை இல்லை என்றும், சாதாரண அம்மை தான் அவருக்கு வந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசியா அவர் தீபாவளியன்று தமிழகத்தில் எந்த விதமான பெரிய விபத்துகளும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.