பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதன் சூட்சமம் இதுதான்!

Photo of author

By Sakthi

திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது மிகப் பெரிய புண்ணியம் என சொல்லப்படுகிறது. முடிந்தவர்கள் திருப்பதிக்கே சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வரலாம்.

இல்லையென்றால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் வணங்கலாம், புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.

துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது, மாவிளக்கு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை சுத்தமான உடலோடும், சுத்தமான மனதோடும் இருந்து சலித்து மாவினால் விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும், பெருமாள் படத்தின் முன்னர் இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி வீட்டில் செல்வச் செழிப்பு உண்டாகும்.