தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் தேர்தல் வழக்குகள்! தப்புமா ஸ்டாலினின் முதல்வர் பதவி?

Photo of author

By Sakthi

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த நிலையில் சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.சி பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக போட்டியிட்ட ஜெயக்குமார் 16507 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவருடைய வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் திமுக கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பாலு அவர்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த இருக்கின்ற மனுவில் தெரிவித்திருப்பதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சுட்டிக்காட்டியும் அதை நிவர்த்தி செய்யவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார். வாக்கு எண்ணிக்கையிலும் ஒரு சில தவறுகள் நடந்திருப்பதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஆகவே சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வெற்றியும் செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்து அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இப்படி திமுகவின் பல சட்ட சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தற்சமயம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அனேக இடங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறது.ஒருவேளை இதே நிலை தமிழகம் முழுவதும் தொடருமானால் நிச்சயமாக அது தமிழகத்தில் திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நிச்சயமாக தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சி களைவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 200 அல்லது 250 என்ற வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது இன்னும் சொல்லப்போனால் 5 வாக்குகள் 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருக்கிறது. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் இதேபோன்று தமிழகம் முழுவதும் வழக்கு தொடரப்படும் ஆனால் அதை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டால் நிச்சயமாக திமுகவின் வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.