டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை
டி.என்.பி.எஸ்.சி என்று சொல்லப்படுகின்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசிற்கு தேவையான அனைத்து நிலை பணியாளர்களையும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் ஒற்றை வாய்ப்பாக இந்த அரசுத்தேர்வுகள் மட்டுமே உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக வெளிவரும் அடுக்கடுக்கான முறைகேடுகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடைபெற்ற குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டின் அதிர்ச்சியில் இருந்து தேர்வர்கள் மீளாத நிலையில் இன்றைக்கு புதிதாக ஒரு தேர்வு முறைகேடும் அம்பளமாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் சண்முகசுந்தரம் என்பவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் குறிப்பிடுள்ளதாவது:
எனது மகன் கடந்த 2018 ஆம் அண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுதிய ஒருசில வாரங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரகயில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் எனது மகன் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவருக்கு விரைவில் பணிநியமன ஆனை கிடைத்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு சிவா என்பவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 27 இலட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே உங்களுடைய மகனுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவிதுள்ளார். இதனை அடுத்து சண்முகமும் அவர் கேட்ட தொகையை கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு அவர்களை தொடர்புகொண்டு சண்முகம் கேட்டபோது அதிகாரிகளுக்கு பணம் போய் சேர்ந்து விட்டது விரைவில் பணிநியமனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரித்த போலீசார் டி.என்.பி.எஸ்.சி இன் அதிகார்ப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி முறைகேடு நடந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் சிவா என்பவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் இவருக்கு உதவியவர்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரமணி மற்றும் இடைத்தரகர் நாகேந்திரராவ் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல் துறையினர் இந்த மூவரையும் தேடி வருகின்றனர்.
தொடரும் முறைகேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் அனைத்து வித சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு மாணவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த டி.என்.பி.சி. தலைவர் நந்தகுமார் அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை தேவை என்பதே தேர்வர்களின் கருத்தாக உள்ளது.