மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா !

Photo of author

By Vijay

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா !

பொங்கல்  என்றால் முதல் நியாபகம் ஜல்லிக்கட்டு தான் , தமிழ்நாட்டில் பொங்கல் அன்று  மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து  இந்திய உச்சநீதிமன்றம்  ஜல்லிக்கட்டை தடை செய்தது.இதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டுகோள் வைத்து பல்வேறு போரட்டங்கள் நடத்தப்பட்டது.

அவை மறியல் போராட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், மௌனப் போராட்டம், உண்ணாவிரதப்  போராட்டம், ஆர்ப்பாட்டம்,மெழுகுவர்த்தி ஒளியேந்தல் போன்ற போரட்டங்கள் தமிழகதில் அலங்காநல்லூர், சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், திருநெல்வேலி வ.உ.சி மைதானம், வேலூர், புதுச்சேரி ஆகியன முக்கியப் போராட்டக் களங்களாக அமைந்தது.போரட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டு இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கியது. இதன் பிறகு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு  மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. இதனால் இன்று  ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.