‘மீண்டும் ஒருமுறை நிர்வாணப் போஸ் கொடுப்பீர்களா?’… ரண்வீர் சிங்குக்கு பீட்டா அழைப்பு

0
163

‘மீண்டும் ஒருமுறை நிர்வாணப் போஸ் கொடுப்பீர்களா?’… ரண்வீர் சிங்குக்கு பீட்டா அழைப்பு

ரண்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போஸ் கொடுத்து அதற்காக பரபரப்பாக பேசப்பட்டார்.

நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் பிரபல பத்திரிகை முதலட்டைப் புகைப்படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெளியான புகைப்படங்களில், ரன்வீர் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக துருக்கிய விரிப்பில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் அவரின் பிறப்புறுப்பு வெளிப்படாத வண்ணம் அழகியல் தன்மையோடு எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிர்வாண போஸ் சம்மந்தமாக பேப்பர் இதழில் ரண்வீரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் “உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது எனக்கு மிகவும் எளிதானது, எனது சில நிகழ்ச்சிகளில் நான் நிர்வாணமாக இருந்துள்ளேன். என் ஆன்மாவை நீங்கள் பார்க்கலாம். அது எவ்வளவு நிர்வாணமானது? அது உண்மையில் நிர்வாணமாக இருக்கிறது. ஆயிரம் பேருக்கு முன்னால் நான் நிர்வாணமாக இருக்க முடியும்,”என்று அவர் பேட்டியில் கூறினார்.

இந்த புகைப்படங்கள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பீட்டா நிறுவனம் அவரை மீண்டும் தங்களுக்காக நிர்வாண போஸ் கொடுக்க அழைப்பு விடுத்துள்ளது. அதில் “அனைத்து விலங்குகளும் ஒரே மாதிரியான உடல் உறுப்புகளைதான் கொண்டிருக்கின்றன- சைவ உணவுக்கு மாறுங்கள்’ என்பதைக் குறிக்கும் விதமாக எங்களுக்காக நிர்வாண போஸ் கொடுக்க தயாராக என்று கேட்டுள்ளது. பீட்டா நிறுவனம் சைவ உணவுப் பழக்கத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள ஒரு நிறுவனம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டா நிறுவனத்துக்குக் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleகள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு! இணையவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சிபிசிஐடி!
Next articleஅடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்! இன்று நடைபெறும் தேர்தல் பரபரப்பில் டெல்லி!