வனிதாவை பற்றி பரபரப்பு  வீடியோவை வெளியிட்ட பீட்டர் பால்!!

Photo of author

By Parthipan K

சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணத்தைக் குறித்து அவரது குடும்பத்தினரும் சினிமா பிரபலங்கள்  பலராலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். அதன்பின் தற்போது பீட்டர் பால் உடல்நிலை குறைவால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்பு வீடு திரும்பிய பீட்டர் பால் சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: நான் மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்கள் என்னை எனது மனைவி வனிதா, ஒரு அம்மாவைப் போல் பார்த்துக் கொண்டார்.

இவ்வளவு நாள் நான் எதையெல்லாம் இழந்து இருக்கிறேன் என்பதை நினைத்து பார்க்க வைத்துள்ளார். உண்மையான அன்பு  காட்டும் வனிதாவை எனது வாழ்க்கையில் கொடுத்ததற்கு கடவுளுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்றும் இனிய வனிதா இல்லை என்றால் நான் இல்லை என்று மன உருக்கத்துடன் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.