வருகின்ற தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மனு தாக்கல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் பெண்கள்,பட்டதாரிகள்,பழங்குடியினர் போன்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பான மனுவை ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக மத்திய ,மாநில அரசிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் போட்டியிட வாய்ப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ரமேஷ் கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோரின் அமர்வு, இந்த வழக்கை விசாரிக்க கோரி உத்தரவிட்டனர்.மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Comment