நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு !!

0
146

மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வானது திட்டமிட்டபடி கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளை வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடைகோரி மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீடு குறித்து கமிட்டி பரிந்துரை அமல்படுத்திய பிறகே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று அவசர வழக்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous articleசென்னைவாசிகள் கவனத்திற்கு..! உற்சாக உத்தரவு.. உயர்நீதிமன்றம் அதிரடி.!
Next articleஎன்னதான் நடக்குது அங்க? வேல்முருகன் பயங்கரமாக சண்டையிட்டு கத்துகிறார்!