சசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!

Photo of author

By Sakthi

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு சசிகலா சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை அடைந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு கொரோனா ஏற்ப்பட்ட காரணத்தால், பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா சமீபத்தில் பெங்களூரு அருகில் இருக்கின்ற தனியார் சொகுசு விடுதிக்கு சென்றார். அந்த சமயத்தில் சசிகலா தன்னுடைய காரில் அதிமுகவின் கொடியைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதன் காரணமாக, அவருடைய இந்த செயலுக்கு தமிழக அமைச்சர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதோடு அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி. சண்முகம் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் போன்றோர் டிஜிபி அலுவலகத்தில் சசிகலா மீது புகார் அளித்திருந்தார்கள்.

இதனை அடுத்து எம்ஜிஆர் வளர்ப்பு மகள் கீதா, மற்றும் ராதா, போன்றோரும் மற்றும் சசிகலா கொடியை ஏற்றுவதற்கான நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் சசிகலா கொடியேற்றுவதற்கான கம்பம் நடுவதற்கு பேனர் வைப்பதற்கு போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், வரும் திங்கள் கிழமை சசிகலா சென்னை வர இருக்கின்றார். ஆகவே தமிழகம் வரும் அவருக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்து பெரியகுளம் அம்மா பேரவை நிர்வாகி டிஜிபியிடம் மனு கொடுத்திருக்கிறார். அவர் தபால் மூலமாக டிஜிபியிடம் அந்த மனுவை அனுப்பி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.