பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Photo of author

By Parthipan K

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்னும் நடத்தப்படாமல் இருக்கின்றன.இதனால் வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.இதற்கு ஒரு தீர்வாக இறுதியாண்டு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.இதனை எதிர்த்து, இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள மாணவர்களில் சுமார் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தனர்.நாளுக்கு நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகமாக உள்ளதால் தேர்வு எழுதாத நிலையில் மாணவர்கள் இருப்பதாலும் ,தேர்வை ரத்து செய்யக்கோரியும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தேர்வுகளை நடத்துவற்கு தடை விதிக்க வேண்டுமென்று டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களும் கூறியுள்ளது.

இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறினர் .

மேலும் இறுதியாண்டு தேர்வினை செப்டம்பர் மாதத்தில் நிச்சயமாக நடத்துவோம் என்று உறுதியாக கூறினார்.இறுதியாண்டு தேர்வு முடிக்காமல் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்க இயலாது என்று யுஜிசி சார்பில் வழக்கறிஞர் கூறினார்.

டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றில், செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது இயலாத காரியம் என்று அரசு தரப்பில் கூறினார்.
அப்படி நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழக உறுப்பினர்கள் ஆகியோர் அனைவரும் அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட காரணமாக அமையும் என்று கூறியுள்ளனர்.

இதற்கு பல்கலைக்கழக மானிய குழு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை ஒத்திவைத்திருப்பது அப்பட்டமான விதி மீறல் என்றும் தெரிவித்துள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.