சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி கச்சா எண்ணெய் விற்பனையில் 2வது இடத்திலிருக்கும் ரஷ்யாவின் மீது உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. இதனால் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்தது இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கலாம் என்ற அபாயம் எழுந்தது.
ஆனாலும் இதுதொடர்பாக எந்தவிதமான கவலையும் பொதுமக்களுக்கு தேவையில்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது இருந்தாலும் இந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த படலாம் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில், கடந்த 120 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இப்படியான சூழ்நிலையில், 127வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.