30-11-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
216

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. ஆகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த 26 தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனையாகி வருகிறது.

இந்தநிலையில், 27வது நாளாக சென்னையில் இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.

Previous articleதொடர் கனமழை! 22 அடியை கடந்தது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்!
Next articleதமிழ்நாட்டில் யாருக்கும் இந்த நோய் தொற்று இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!