1-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Photo of author

By Sakthi

1-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Sakthi

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது.

நாடு முழுவதும் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்த சூழ்நிலையில், இந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை தற்போது உயர்த்தி வருகின்றனர். தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பின் அடிப்படையில் பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.

இதற்கு நடுவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும், குறைப்பதாக அறிவித்து அதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் இந்நிலையில்,, 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், சென்னையில் தொடர்ந்து 58 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.