ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா பெட்ரோல் டீசல் விலை? மத்திய அரசு இன்று வெளியிடப் போகும் அதிரடி அறிவிப்பு!

0
135

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு தான் இந்தியாவிலேயே இதுவரையில் மிக அதிக வரி பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.காரணம் மற்ற அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, பெரிய அளவில் வரி செலுத்தப் படுவதில்லை. ஆனால் இந்த பெட்ரோல், டீசல் விலை மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர படாமல் இருப்பதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் அதிக வரி பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.நாட்டில் அனைத்து பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்த மத்திய அரசு ஏன் பெட்ரோல் டீசல் விலையை மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவில்லை என்று கேள்வி எழுப்பிய சமயத்தில், மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்ட பதில் என்னவென்றால் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்கவில்லை என தெரிவித்தது மத்திய அரசு.

இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைத்த திமுக தற்போது பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைந்தது.இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற இருக்கிறது. 20 மாதங்களுக்குப் பின்னர் இந்த ஜிஎஸ்டி கூட்டம் நேரடியாக நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற அனைத்து பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

அவ்வாறு ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டுவரப்பட்டு விட்டால் மத்திய மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு உண்டாகும். தங்களுடைய வருமானத்திற்கு இழப்பு உண்டாகும் முடிவுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் வழங்குமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.தற்சமயம் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது முப்பத்தி இரண்டு ரூபாய் என்பது காசும், டீசல் மீது முப்பத்தி ஒரு ரூபாய் என்பது காசும், மத்திய அரசு உற்பத்தி வரி வசூல் செய்கிறது. இதில் மாநில அரசுக்கு பங்கு தருவது இல்லை. இருந்தாலும் ஜிஎஸ்டி என்றால் இரு தரப்புக்கும் தலா 50 சதவீதம் என்ற அளவுக்கு சரக்கு, சேவை வரி பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்கு கீழே கொண்டு வரப்படுமா? என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை.