கடந்த 20 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை கடும் விழ்ச்சியை சந்தித்த நிலையிலும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே உள்ளனர்.
கொரோனா தாக்கம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 15 டால்லர் என்ற நிலையில் குறைந்தது.இதனை அடுத்து இந்த மாத தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த 7 ஆம் தேதி முதல் இன்று(ஜூன் 26) வரை பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.37 ரூபாயாக மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 77.44 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7 ஆம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல் விலை 7.33 ரூபாயாகவும் டீசல் விலை 9.22 ரூபாயாகவும்
அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெட்ரோல் விலை ரூ.90 ஐ கடக்கலாம் என கூறப்படுகிறது.