ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை !

Photo of author

By Parthipan K

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றனர். இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக எரிபொருள் பயன்பாடு குறைந்ததால் கச்சா எண்ணெயின் விலை குறைந்தது. இதனால் கடந்த மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் பெட்ரோல் டீசல் விலையை மாற்றாமல் மத்திய மாநில அரசுகள் வரியை மட்டும் ஏற்றிக்கொண்டது. மேலும் ஜூன் மாதத்தில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த தொடங்கியது.இதனை அடுத்து ஜூன் 7 முதல் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்த நிலையில் எதிர்கட்சிகளின் எதிர்பார்ப்புகள் காரணமாக ஜூலை 1 முதல் ஒரு வார காலம் பெட்ரோல் விலையை ஏற்றாமல் நிலையாக விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டது.இதனை அடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.91 க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆக விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஜூன் 7ஆம் தேதியில் இருந்து இந்த மாதம் ஜூலை 7 வரை சரியாக ஒரு மாதத்திற்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு
ரூ.8.09 ஆகவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.9.59 ஆகவும் அது எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.