சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படும் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தனர். தற்பொழுது இந்த நிலை மாற்றப்பட்டு பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.83.63 ஆக விற்பனை செய்யப்படுகிறது.மேலும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.78.11 என விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது மக்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. இருந்த போதிலும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மற்ற பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.