இன்று (ஜூலை 17) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
197

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதனால் போக்குவரத்து சேவை குறைந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்தது.இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது.

சென்னையில் கடந்த ஜூன் 29 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.63 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.அதன் பிறகு பெட்ரோல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 நாளாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.63 ஆக விற்பனை செய்யப்படுகிறது.மேலும் டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் விலை 78.47 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleதேர்வில் தோல்வி அடைந்த சோகத்தில் பிளஸ்2 மாணவி எடுத்த விபரீத முடிவு!
Next articleகோவையில் ஈவேரா சிலை மீது காவி நிறத்தை ஊற்றிய மர்ம நபர்கள்! கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here