உயராத பெட்ரோல் டீசல் விலை!

0
227

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.அந்த விதத்தில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணி நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக மார்ச் மாதம் ஊரடங்கு கடமையாக்கப்பட்டது. இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், தொடர்ச்சியாக 26ஆவது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சென்னையில் எந்தவிதமான மாற்றமும் நிகழாமல் அதே நிலையில் தொடர்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 39 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleசென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை!
Next articleவரும் ஆண்டில் சென்னை மாநகரம்  மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here